நார்வே பெண் பாலியல் பலாத்காரம்! குணதிலகவுக்கு தடை – சலுகையும் ரத்து

0

நார்வே பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்சனையில் இலங்கை வீரர் குணதிலகா 6 போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. #Gunathilaka

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்கா குணதிலகா. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை சஸ்பெண்டு செய்து அதோடு அவரது வருமானத்தில் 20 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

குணதிலகாவின் நண்பர் ஒருவர் லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் ஆடுகிறார். இவர் தனது தந்தையை பார்க்க சமீபத்தில் இலங்கை சென்றார். அவர் இலங்கைக்கு சுற்றுலா வந்த நார்வே நாட்டு பெண்கள் 2 பேரை குணதிலகா தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வீரர்கள் தங்கும் அறைக்கு மற்றவர்களை அழைத்து செல்லக்கூடாது என்பது விதியாகும். இதன் காரணமாகவே குணதிலகா சஸ்பெண்டு செய்யப்பட்டார். நார்வே பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குணதிலகாவின் நண்பரை இலங்கை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நார்வே பெண்கள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் போலீசார் இன்னும் சுமத்தவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது.

இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. ஏற்கனவே விளையாடிய 2 டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் உள்ளிட்ட எந்தவித சலுகையும் அவருக்கு வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.