பணத்துக்காக நிர்வாணமாக நடிப்பதா? ராஜ்ஸ்ரீக்கு எதிர்ப்பு

0

இந்தியில் வெளியான வெப்சீரிஸில் ராஜ்ஸ்ரீ நிர்வாணமாக நடித்ததற்கு பணத்திற்காக இப்படியெல்லாமா நடிப்பார் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #RajShri #RajShriDeshPande

நெட்பிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காட்டி இருந்தனர். சேக்ரட் கேம்ஸ் தொடரில் நவாஜுதீன் சித்திக் ஜோடியாக வந்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே படுக்கை அறை காட்சியில் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளத்தில் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேயை பலர் விமர்சித்தனர். செக்ஸ் காட்சியில் பாலியல் படங்களில் நடிப்பதுபோல் நடித்து இருக்கிறீர்களே? இதில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?. பணம்தான் முக்கியமா? பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பீர்களா? என்றெல்லாம் கண்டித்தனர்.

இதற்கு ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘நான் நிர்வாணமாக நடித்ததை விமர்சிக்கின்றனர். பணம்தான் முக்கியமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். கதைக்கு தேவை என்பதால் நிர்வாணமாக நடித்தேன். அந்த கதையை பிரபல நாவலில் இருந்து எடுத்தனர். அதற்கு அற்புதமான வசனத்தை எழுதி இருந்தனர். அனுராக் காஷ்யப் சிறப்பாக இயக்கி இருந்தார். நடிக்க வந்துவிட்ட பிறகு படுக்கை அறை காட்சியில் நடிக்க முடியாது என்று எப்படி மறுக்க முடியும்.’’

இவ்வாறு ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.