பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டதால் விஷால் மிரட்டுகிறார்! ஸ்ரீ ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு

0

தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். #SriReddy #Vishal

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.

அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரை வெளியிட்டு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த வரிசையில் நேற்று ராகவா லாரன்சையும் இணைத்துள்ளார்.

மூன்று முக்கிய நபர்களின் பெயர்களை ஸ்ரீ ரெட்டி அம்பலப்படுத்தியது, தமிழ் திரையுலகை கதிகலங்கச் செய்துள்ளது. இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Vishal

Leave A Reply

Your email address will not be published.