பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் பொலீசில் சரண்

0

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஒருவர் இன்று போலீசில் சரண் அடைந்தார். #KeralaPriestSurrenders

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம் – ஒரு பாதிரியார் போலீசில் சரண்
கொல்லம்:

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையில் பாவமன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாதிரியார்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ, ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, எனவே அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜோப் மேத்யூ இன்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்ற பாதிரியார்களும் விரைவில் சரண் அடையலாம் என தெரிகிறது. #KeralaPriestSurrenders

Leave A Reply

Your email address will not be published.