பிரபல சிங்கள பாடகி கணவனால் குத்திக் கொலை ! வீட்டில் சடலமாக மீட்பு

0

இலங்கையின் பிரபல சிங்கள பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல விடயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழ்ந்த பாடகிக்கும், அவரின் கணவருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணியளவில் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கணவனாலேயே பாடகி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் அதேவேளை, அந்தப் பகுதியை விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.கொலையாளியை கைது செய்ய பாணந்துர தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

51 வயதான மூன்று பிள்ளைகயின் தாயான பிரியானி ஜயசிங்க என்ற பிரபல பாடகியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.