பிரான்ஸ் ணியின் இளம் வீரர் எடுத்த முடிவு! கோடிக்கணக்கான பணத்தை யாருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா?

0

பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக Kylian Mbappé இருந்தார்.

பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமும் இவர் தான், இந்நிலையில் இவர் உலகக்கோப்பை போட்டியில் தன்னுடைய சம்பளம் மற்றும் வெற்றிபெற்றதற்காக கொடுக்கப்பட்ட போனஸ் சம்பளம் என மொத்தம் 550,000 டொலர்(இலங்கை மதிப்பில் 8,78,95,500 கோடி) என மொத்த தொகையையும் இலவசமாக விளையாட்டு சொல்லி கொடுக்கும் தொண்டு நிறுவனம் மற்றும் ஊனமுற்ற நிலையில் விளையாடி வரும் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

இந்த இளம் வயதில் இவரின் செயலைக் கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.