பேஸ்புக்கில் ஆபாசமாக அரட்டை அடித்த காவாலிகள் ! கொஞ்சும் தமிழில் மனக்குமுறலை கொட்டித்தீர்த்த யுவதி – காணொளி உள்ளே
சமூக வலைத்ததளங்கள் இன்று எமது அன்றாட வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்து விட்டது . வங்கியில் பாஸ்புக் இருக்கின்றதோ இல்லையோ அனைவரிடமும் பேஸ்புக் இருக்கிறது .சமூக வலைத்தளங்கள் இன்று பிரச்சனைகளின் அடித்தளமாக காணப்படுகின்றன .
பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும்
டுவிட்டர் பேஸ்புக் ஆகியன பாவனையாளர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றது .டுவிட்டர் பெரும்பாலும் பல் வேறு துறைகளில் உள்ள பிரபலங்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது .ஆனால் பேஸ்புக் பிரபலம் முதல் பிலாப்பழம் விற்கின்றவன் வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது .
பேஸ்புக் சமூக வலைத்தளம் இன்று பிரச்சனைகளின் கூடாரமாக காணப்படுகின்றது .சில நல்ல விடயங்களுக்கு பேஸ்புக் உபயோகமாக இருந்தாலும் கூடாத விடயங்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து அதற்கு பெண் மறுப்பு தெரிவித்து விட்டால் பேஸ்புக்கில் போலியான கணக்கினை உருவாக்கி அந்தப்பெண்ணை அவமானப்படுத்தும் கீழ்த்தரமான செயல்கள் இடம்பெறுகின்றன.
இருதலைக் காதலிலும் பெண் பெற்றோரின் நிர்பந்தத்தின் காரணமாக அல்லது சூழ்நிலை காரணமாக பிரிந்து சென்று விட்டால் காதலன் தனது காதலியின் புகைப்படங்களை பதிவேற்றி அசிங்கப்படுத்தும் கேவலமான செயல்கள் பேஸ்புக்கில் மலிந்து காணப்படுகின்றது .
பேஸ்புக் ஒரு சில குடும்பங்களை சேர்த்து வைத்திருந்தாலும் பல குடும்பங்களை பிரித்து வைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை .ஹீரோ போன்று , நல்ல மனிதர் போன்று வேடமிட்டு ,முகமூடி அணிந்து பெண்களின் நட்பு வட்டத்தில் இணையும் சில ஆண்கள் முதலில் பெண்களது பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டு அதன் மூலமாக நல்ல நண்பர்கள் ஆகின்றார்கள் .அதன் பிறகு மெல்ல மெல்ல மெதுவாக உள்பெட்டியில் நுழைந்து அரட்டை அடிக்க தொடங்குகின்றார்கள். அரட்டையின் உச்ச கட்டத்தில் தமது முகமூடியை கழற்றி வைத்துவிட்டு சுயபுத்தியை காட்டுகின்றார்கள் .இதில் பெரும்பாலும் சிக்கிக்கொள்வது குடும்ப பெண்களும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் ஆவார்கள் .
தமது பதிவுகளுக்கு நாகரிகமான முறையில் கமெண்ட் செய்வதினால் கமெண்ட் செய்யும் ஆண் நல்லவர் ஹீரோ என்று பெண்கள் எளிதில் நம்பிவிடுகின்றார்கள் .அதன் காரணமாக இன்பொக்ஸிலும் நம்பி அரட்டை அடிக்கின்றார்கள் .ஆனால் இன்பொக்ஸில் தமது உண்மையான முகத்தினை வெளிப்படுத்தும் விஷமிகள் பெண்களுடன் ஆபாச அரட்டைகளில் ஈடுபடுகின்ரறனர் .ஆபாச படங்களை அனுப்பி தமது பாலியல் வக்கிரத்தினை தீர்த்துக்கொள்கின்றார்கள் .
பேஸ்புக்கில் இடம்பெறும் பிரச்சனைகளில் ஈடுபடுவது வெறுமனே ஆண்கள் மட்டும் அல்ல .பேஸ்புக்கில் பெண்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள் . குறிப்பாக பெண்கள் பணக்கார ஆண்களை நண்பர்களாக்கி அவர்களுக்கு பாலியல் ஆசை காட்டி நூதனமான முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன .
தகவல் தொழில்நுட்பமாக இருக்கட்டும் பேஸ்புக்காக இருக்கட்டும் எதுவாயினும் அவற்றினை சரியான முறையில் அளவோடு பயன்படுத்தினால் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் ,குறிப்பாக பேஸ்புக் பொது அறிவுக்களஞ்சியமாக திகழ்கின்றது .உலகின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் விடயங்களை ஒரு நொடியில் பேஸ்புக் மூலம் அறிய முடிகின்றது .ஆகவே சமூக வலை தளங்களை சரியான முறையில் அளவோடு பயன்படுத்தி பயன்பெறுவோமாக .
தனது உள்பெட்டியில் நுழைந்து அநாகரிகமான முறையிலும் ஆபாசமான முறையிலும் அரட்டை அடித்த ஆண்களினால் எரிச்சல் அடைந்த யுவதி ஒருவர் தனது மன ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் காணொளி பேஸ்புக்கில் வைரல் ஆகி உள்ளது .குறித்த யுவதி ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட யுவதி என்று அறிய முடிகின்றது . யுவதியின் உள்ளத்து குமுறல் காணொளியாக கீழே இணைக்கப்பட்டுள்ளது .இதனை பார்த்த பிறகு சரி பெண்களுடன் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் ஆசாமிகள் திருந்த வேண்டும் .திருந்துவார்களா ?