போரினால் கணவனை இழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட 11 ஆடுகளை வெட்டி கொலைசெய்த ஈனப்பிறவிகள் -படங்கள் இணைப்பு
முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் 11 ஆடுகளை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்துள்ளதாக விசுவமடு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளனர்.
கணவனை இழந்த பெண் ஒருவருக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட 03 ஆட்டுக்குட்டிகள் உள்ளிட்ட 11 ஆடுகள் ஒரே இரவில் இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் கணவனையிழந்த குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இந்த ஆடுகள் வாழ்வாதாரமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த ஆடுகளை ஈன இரக்கமின்றி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளாக அந்தப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.