மழையில் உதட்டு முத்தம் பரிமாறிய காதலர்களை படமெடுத்த பத்திரிக்கையாளருக்கு நேர்ந்த கதி !

0

வெளுத்து வாங்கும் மழையில் தேநீர் கடை ஓரத்தில் காதலர்கள் உதட்டில் முத்தமிடும் காட்சியை புகைப்படம் எடுத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தின் முன்னணி பத்திரிகை நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றும் ஜிபான் அஹமெத் என்பவர், அந்நாட்டின் பல்கலைக்கழக விழா ஒன்றுக்கு செய்தி சேகரிக்க சென்றிருந்தார்.

அப்பொது பெய்த மழையில், பல்கலைக்கழக சாலையோர தேநீர் கடையில் காதலர்கள் உதட்டில் முத்தம் பாரிமாறிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த அஹமெத் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதை செய்திக்கு கொடுக்காமல், தனது தனிப்பட்ட வலைதள பக்கத்தில் அந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டார். அது சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த விவகாரத்தை அறிந்த அஹமெத் வேலை செய்யும் பத்திரிக்கை நிறுவனம், அவரை காரணம் எதுவும் சொல்லாமல் பணியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறிப்பித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் வங்காளதேசம் ஊடகத்தினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்நாட்டில் பெண்களுக்கான ஒடுக்குமுறை மிக அதிகம். அதன் காரணமாக பத்திரிகை நிறுவனம் புகைப்படக் கலைஞர் அஹமெத் மீது இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில் காதலர்கள் முத்தமிடும் புகைப்படம் தொடர்ந்து அந்நாட்டில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் மற்றும் பல நாட்டினரும் ஜிபான் அஹமெத் படத்திற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.