இந்தியாவில் வர்த்தக நிலையங்களை நடிகைகள் திறந்து வைக்கின்றார்கள். நகைக்கடை, புடவைக்கடை, சுவையகங்கள் எல்லாவற்றையும் சம காலத்தில் பிரசித்தமான மற்றும் கவர்ச்சி நடிகைகள் திறந்து வைக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வு ஈழத்திலும் நடந்திருக்கிறது. மக்களின் போராட்டத்தில் காண முடியாத தலைவர்கள்தான் இந்த நடிகர் நடிகைகள்.
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் குளிரகம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டு திறந்து வைத்துள்ளனர். இதற்கா கிழக்கில் இருந்துகூட எம்பிக்களும் கட்சி ஆதரவாளர்கள் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தை இவ்வளவு ஒற்றுமையாக மக்களுக்கான போராட்டத்தில் கூட காண முடியாது.
தமிழ் மக்கள் இன்று எவ்வளவோ பிரச்சினையின் மத்தியில் வாழ்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெருவில் இருக்கின்றனர். மக்கள் நிலங்களை இழந்து வீதிகளில் இருக்கிறார்கள். போரில் பிள்ளைகளைப் பறிகொடுத்த உறவுகள் தினம் தினம் செத்து வருகிறார்கள். இராணுவ முகாங்களும் இன அழிப்புமாய் இருக்கிறது ஈழ தேசம்.
இந்த சூழலில் இந்த மக்களின் பொறுப்பு டய தலைவர்கள் இதனை செய்வார்கள்? குளிரகங்கள் தேவைதான். அதனை திறக்க இத்தனை தலைவர்களும் ஆடம்பரங்களும் தேவையா? தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்த நாய்கள் இப்படி நடந்து கொள்வார்களா? இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள் நெஞ்சில் இரத்தம் வழியும் இந்த நிலை கெட்ட மனிதர்களைப் பார்க்க…
இவர்கள் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றும் கவர்ச்சி நடிகைகள் ஆகிவிட்டனர்.
ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
22.07.2018