யாழ்ப்பாணத்தில் திருடர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நாய் ஒன்று ஒரே நாளில் ஹீரோவாகி சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தென்மராட்சி பிரதேசத்தில் இரு இடங்களில் திருடர்கள் மேற்கொண்ட முயற்சி வீட்டுக்காரர் சத்தமிட்டதால் முறியடிக்கப்பட்டது.
மீசாலைப் பகுதியிலுள்ள வீட்டினுள் திருடர்கள் உள்நுழைந்ததைக் கண்ட வீட்டுக்காரர் சத்தமிடவே அங்கிருந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
சரசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளையில், திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
எனினும் வளவுக்குள் நுழைத்த திருடர்களைக் கண்டு, அங்கு நின்ற நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் நாயினை வெட்டிச் சாய்த்துவிட்டு கதவை உடைத்து உள்நுழைந்த போது அயலவர்கள் கண்டு சத்தமிடவே அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
திருட்டு முயற்சிகள் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.