வடக்கில் இரத்த ஆறு ஓடவேண்டும் என்பதே சிங்கள அரசியல்வாதிகளின் விருப்பம்!

0

தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கை கலவர பூமியாகவே வைத்திருக்க விரும்புகின்றதாக வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர் தாயகப் பகுதியை எப்பவும் கலவர குழப்பம் நிறைந்த பகுதியாக வைத்திருக்கவே தென்னிலங்கை இனவாத அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.

ஏனெனில் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தாங்கள் நாட்டின் தேச பக்தர்கள் போல காட்டிக் கொள்வதற்கும் வடக்குத் தமிழர்களை பிரிவினை வாதிகள் என சித்தரிப்பதற்காகவும் பௌத்த கோட்பாட்டில் தாம் உறுதியாக இருப்பவர்கள் என நிறுவுவதற்குமாக இனவாத நெருப்பை பற்ற வைக்கின்றனர்.

இவ்வாறான அரசியல் வாதிகள் சிங்கள அரச கட்சிகள் யாவற்றிலும் அதிகரித்து வருகின்றனர். அதாவது தென்பகுதியில் விரைவாக கீரோவாக வருவதற்கு தமிழர் தரப்பில் நல்லிணக்கத்திற்கு எதிரான நிகழ்வுகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இதனால் அப்பாவி சிங்கள மக்கள் உண்மைத் தன்மை தெரியாது தமிழ் மக்கள் மீது இனப் பகையை வளர்த்துக் கொள்கின்றனர். இவ்வாறான நிகழ்ச்சி நிரல் தமிழர்களின் சுய இருப்பையும் சுயநிர்ணய உரிமையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அந்த வகையில் சிறீலங்கா அரசும் அதன் இயந்திரமும் தமிழ் மக்கள் அமைதியான நல்லணக்கத்துடன் வாழ சிறந்த ஒரு அரசியல் தீர்வை அரசியல் திருத்தம் மூலம் தருவார்கள் என இனியும் நம்புவதில் அர்த்தமில்லை.

அத்தோடு அவ்வாறு நம்புவதும் முட்டாள்தனம்.தமிழர்தரப்பில் சரியான நடைமுறைகள் தந்திரோபாய நடவடிக்கைள் கையாளப்படாமை வேதனையான விடையம். கால இழுத்தடிப்பு செய்தல் தமிழர் இருப்பை சோரம் போகச் செய்துவிடும் பெறுமதியான தியாகங்கள் அர்த்தமற்றதாகிவிடும் மக்களின் ஐனநாயக உரிமை பறிக்கப்படுவதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.