வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து

0

இந்தியாவிற்கு எதிரான பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க 1000-மாவது போட்டியாகும். #ENGvIND

வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது இங்கிலாந்து
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நாளைமறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இரண்டு அணிக்கும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றியுடன் தொடரை தொடங்க இரு அணிகளும் விரும்பும்.

இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் கொண்டதாகும். ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. புதன்கிழமை தொடங்கும் டெஸ்ட் இந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும்.

1000-வது டெஸ்டில் விளையாட இருக்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 999 டெஸ்ட் போட்டிகளில் 357-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. எட்ஸ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 27 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.