வெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த புதின்

0

வெளிநாட்டில் இருந்து கால்பந்து உலகக்கோப்பை போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் 2018 வரை ரஷியாவில் தங்கிக் கொள்ளலாம் என புதின் அறிவித்துள்ளார். #WorldCup2018

வெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த புதின்
ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் இந்த மாதம் 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. ரஷியாவைத் தவிர 31 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன.

ஒருமாத காலம் நடைபெற்ற கால்பந்து திருவிழா பார்க்க உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரஷியா சென்றனர். அவர்களுக்கு ‘ரசிகர் ஐடி (Fan ID)’ வழங்கப்பட்டது. இந்த ஐடி மூலம் விசா இல்லாமல் ரஷியா சென்று ரசிகர்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணிக்கு கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியில் ரஷியா அதிபர் புதின் கலந்து கொண்டார்.

அப்போது ‘ரசிகர் ஐடி’ மூலம் ரஷியா வந்த வெளிநாட்டு வீரர்கள் இந்த கார்டை வைத்து இந்த வருடம் மூலம் எத்தனை முறை வேண்டுமென்றாலும் ரஷியாவிற்கு வந்து செல்லலாம். ரஷியாவின் எந்த பகுதிக்கும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.