27 ஆம் திகதி தோன்றவுள்ள நூற்றாண்டின் மிக நீண்ட ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம்

0

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் 27ம் தேதி வானில் தோன்றவுள்ளது. ரத்தச் சிவப்பு சிறத்தில் தோன்றும் இந்த சந்திர கிரகணத்தை காண உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.

நடப்பாண்டில் சந்திரன் ரத்தச் சிவப்பு நிறத்தில் தோன்றுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி 31ம் தேதி தோன்றிய பிள்ட் மூன், சூப்பர் மூனுடன் வந்து போனது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி இரவு 11.53 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 12.59 மணிக்கு முழு கிரகணமாக உருவாகும். தொடர்ந்து ஜூலை 28ம் தேதி நள்ளிரவு 1.51 வரை நீடிக்கும் சந்திர கிரகணம், நள்ளிரவு 2.43 மணிக்கு முடிவடைகிறது.

சூரிய அஸ்தமானத்திற்கும்,நள்ளிரவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் தோன்றும் இந்த கிரகணம், தற்போதைய நூற்றாண்டின் மிக நீண்ட முழு ரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய வானியல் நிகழ்வு ஐரோப்பிய, ஆஃபிரிக்கா, ஆசிய, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நன்றாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை பார்க்க எந்த சிறப்பு கண்ணாடிகளும் தேவையில்லை. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாதாரண கண்களிலே இந்த அரிய ரத்தச் சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.