அஜீத் போன்ற மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை ! மனம் திறந்தார் பிரபல நடிகை

0

அஜீத் போன்ற எளிமையான மனிதரை என் வாழ்நாளில் பார்த்தே இல்லை என்று பிரபல நடிகை மீனா வாசு கூறியுள்ளார்.

நடிகர் அஜீத்தை எல்லோருக்கும் பிடிக்கும். காரணம் அவரது எளிமை. எல்லோரிடமும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரே மாதிரியாக பழகும் தன்மை கொண்டவர். அவர் ஒரு நடிகர் என்பதை விட ஒரு மனிதநேயமுள்ளவர் என்பதுதான்.

தற்போது அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘விஸ்வாசம்‘ படப்பிடிப்பில் இருந்த அஜீத்தை பிரபல தெலுங்கு நடிகை மீனா வாசு சந்தித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அஜீத்தின் சந்திப்பு குறித்து மீனா வாசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ‘‘இது ஒரு ரசிகையின் தருணம். அஜீத் போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை. என்ன ஒரு இனிமையான, எளிமையான மனிதர். ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்த நடிகர்கள் அதன்பின்னர் அவர்களுடைய நடத்தையில் மிகப்பெரிய மாற்றம் இருப்பதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

ஈகோ என்கிற வெறிநாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. அப்படிபட்டவர்களெல்லாம் அஜீத்தின் காலை தொட்டு வணங்கினால்,அவரது உயர்ந்த குணத்தில் 10 சதவிதமாவது வரும் என்பதே எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.