அரசியலில் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
2020 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நான் அரசியலில் நுழைவது நிச்சயமாகவிட்டது என வெளியாகியுள்ள தகவல்களை நான் கவலையுடன் வாசித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வெளியாகியுள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் எதிர்வுகூறல்கள் குறித்தும் நான் அறிந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் வாசித்ததன் மூலமும் நான் கேள்விப்பட்டதன் மூலம் சிலர் நான் பொருத்தமான வேட்பாளர் என தெரிவித்துள்ளதையும்,ஏனைய சிலர் என்னுடைய நம்பகத்தன்மை மற்றும் குணாதிசயம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதையும் அறிந்துள்ளேன் எனவும் சங்ககார தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியிலிருந்து வெளியாகியுள்ள பல்வேறு கருத்துக்களை மதிக்கும் அதேவேளை நான் இந்த ஊகங்களிற்கும் எதிர்வுகூறல்களிற்கும் முற்றுமுழுதாக முடிவு கட்டவிரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ள குமார் சங்ககார அரசியல் பதவி வகிப்பது குறித்து என எந்த எண்ணமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஓருபோதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்பதையும் என்னால் தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு அரசியல் அபிலாசைகள் எதுவும் இல்லாதஅதேவேளை இலங்கை மக்கள் மிகவும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களிற்கு வாக்களிப்பதற்கான தொலைநோக்கை கொண்டிருப்பார்கள் எனவும் குமார் சங்ககார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.