அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் 16 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ! அதிர்ச்சி செய்தி

0

ஒரு மருத்துவமனையின் ஐசியூவில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கருவுற்றிருக்கும் அதிசயம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.

அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் பணிபுரியும் கருவுற்ற நர்ஸ்களுக்குள் பேசிக்கொள்வதற்காக ஒரு பேஸ்புக் குரூப் தொடங்கப்பட்டபோது, ஐசியூவில் மட்டும் 16 நர்ஸ்கள் கர்ப்பமாக இருப்பது தெரிந்திருக்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒரு நர்ஸ், “நாங்கள் குடித்த தண்ணீரில் ஏதோ இருந்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இன்னொருவர், “நாங்கள் எல்லோருமே லீவு கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டுதான் இதற்கு ஏற்பாடு செய்தோம்.” என்றிருக்கிறார்.

இவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஜனவரிக்குள் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.