இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.
இ.தொ.க. தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இ.தொ.க. வின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா கட்சியின் தேசிய சபையின் அங்கீகாரத்தோடு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.