இங்கிலாந்து அணியை காலி செய்த கோலி தலைமையிலான அணி ! புதிய சாதனையும் படைப்பு

0

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற்ற 6வது இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

நாட்டிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்களில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணி நிர்ணயித்த 521 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து, 317 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அணித்தலைவராக கோஹ்லி முதல் வெற்றியை பெற்றுள்ளார்.இதற்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், தற்போது கோஹ்லி தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளதால், இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றியை பெற்ற 6வது இந்திய அணித்தலைவர் என்ற சிறப்பை கோஹ்லி பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.