இணையத்தில் ஆசுவாசமாக பட்டையை கிளப்பும் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் தோற்றம்

0

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் முதலாவது தோற்றம் இன்று வியாழக்கிழமை 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது .

வீரம் , வேதாளம் , விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் மற்றும் சிவா கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது .

சத்திய ஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா , விவேக் , ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றார்கள் .

விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் தோன்றவுள்ளார் . சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு அஜித்தும் கருமையான முடியில் இளம் அஜித்தாக ஸ்டைல் ஆன அஜித்தாக இன்னொரு வேடத்திலும் தல கலக்கவுள்ளார் . நரை முடியிலும் அஜித் செமையா காட்சி தருகின்றார் .

இரட்டை வேடங்களில் நடிப்பது அஜித்துக்கு கை வந்த கலை. அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட் ஆவது வழமை.ஆகவே விஸ்வாசம் படமும் மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் .

வருகின்ற தீபாவளிக்கு விஸ்வாசம் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த போதும் படம் 2019 ம் ஆண்டு தை பொங்கல் தினத்தன்று வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகின்றது . 2019 தல பொங்கல் என்பதில் சந்தேகம் இல்லை ,தெறிக்க விடலாமா ?

Leave A Reply

Your email address will not be published.