இது லாரன்ஸ் மாஸ்டருக்காக..கவர்ச்சி வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி ! வீடியோ இணைப்பு

0

ராகவா லாரன்ஸுக்காக என்று கூறி வீடியோ ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தன்னை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார்.

அவரின் புகாரை மறுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஸ்ரீ ரெட்டி இவ்வளவு பேசியும் அவர் மீது கோபம் வரவில்லை, மாறாக அவரை பார்த்தால் பாவமாக உள்ளது என்றார் ராகவா லாரன்ஸ்.

மேலும் மீடியாக்கள் முன்பு ஆடிஷன் நடத்தி அதில் ஸ்ரீ ரெட்டி சிறப்பாக நடித்தால் உடனே தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறினார் ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் கூறியதையடுத்து ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இது லாரன்ஸ் மாஸ்டருக்கு என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.