இனியும் தமிழீழம் சாத்தியமா ? தலைவர் பிரபாகரன் அவர்களின் பதில் என்ன?
?. எனது காலத்திலேயே ஈழம் கைகூடும் என்ற நினைப்பில் நான் போராடவில்லை. எனக்குப் பின்னரும் நாற்பது ஆண்டுகள் இளைஞர்கள் போராடி இயங்குவதற்கான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
?. தமிழ் ஈழத்திற்கு ஆதரவான உலகப் பொதுக்கருத்து உருவாகுமென நீங்கள் நம்புகிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு…
?. நான் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்துகிறேன். ஒருபோதும் போருக்கு புலிகள் காரணமாய் இருந்ததில்லை. யுத்தம் எம்மீதும் எமது மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. நாங்களோ, எமது மக்களோ யுத்த வெறி கொண்டவர்களல்ல. சிங்களப் பேரினவாதம்தான் யுத்த வெறிகொண்டு எம் மக்களை நசுக்க வருகிறது. இதனை உலகம் ஒருநாள் புரிந்துகொள்ளும்” என்றார்.
?. நேரில் பார்க்கவும் பேசவும் அப்படியொரு சாதுவாகத் தெரிகிறீர்கள். உலகமோ உங்களைப் பற்றி கடுமையான பார்வை கொண்டிருக்கிறது. உங்களது உண்மையான ஆளுமையை உலகிற்கு எடுத்துக்கூறும் விளம்பர முயற்சிகளை ஆங்கில ஊடகங்கள் வழி அதற்குரிய நிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடாதா?” என்ற கேள்விக்கு… தலைவர் பிரபாகரன் அவர்கள் தந்த பதில் காலங்களையெல்லாம் கடந்து நிற்கும். இதுதான் அவரது பதில்:
?. வியாபாரிகளுக்குத்தான் விளம்பரம் வேண்டும். வீரனுக்கல்ல”.
இதனை எழுதுகையில் எழுதுகோலும் தாளும்கூட என்னோடிணைந்து சிலிர்ப்பதாய் உணர்கிறேன். என்ன தெளிவு. என்ன கூர்மை. ”வியாபாரிக்குத்தான் விளம்பரம் வேண்டும், வீரனுக்கல்ல. தொடர்ந்து கூறினார் :
?. ”எம்மைப் பற்றின தவறான புரிந்துமைகள் நிச்சயம் ஒருநாள் மாறும். ஏனென்றால் தன் பேரினவாத வெறியிலிருந்து சிங்களம் ஒருபோதும் மாறப்போவதில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை உலகம் நிச்சயம் புரிந்துகொள்கிற காலம் வரும்” என்றார்.
?. குறைந்த அளவு படையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றீர்கள்? என்ற கேள்விக்கு…
?. தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிற மோதல் அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின் மன எழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயான போரென்றால் எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும்.
எதிர்காலத்தில் மீண்டும் போர் தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத் தொடங்கிவைத்த மன எழுச்சி அடங்காது. அந்த மன எழுச்சியை எந்தப் படைகளாலும் அடக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.