இன்னும் நிறைய கோணங்களில் அவதூறு செய்!

0

நீ டேனியல்னு பேரு வச்ச , அவர் பாலஸ்தீன விடுதலைக்காக நிக்கிறார்.

நீ திராவிடன்னு பேரு வச்ச, அவரு தற்சார்பு தமிழ்நாடுன்னு மாநாடுகள் நடத்துறாரு.

நீ தமிழ்தேசியவாதின்னு பேரு வச்ச, அவரு பெரியாருக்கு மாலையிட்டு செடிஷன் கேஸ் வாங்கி நிக்கிறாரு..

நீ RAW கைகூலின்னு சொன்ன, அவரு இந்தியாவின் மிக கொடூரமான UAPA வழக்கு வாங்கி நிக்கிறாரு..

நீ இந்திய அரசை எதிர்க்கலைனு சொன்ன, அவரு இந்திய ஏகாதிபத்திய அரசின் இனப்படுகொலை தொடர்பை சர்வதேசம் வரைக்கும் கண்டிச்சு பேசுறாரு.

நீ அவரை NGO ன்னு சொன்ன, அவரு மிகப்பெரிய NGO ICG யை அம்பலப்படுத்தி புத்தகமே போட்டு நிக்கிறார்.

நீ அவரை வெளிநாட்டு கைகூலின்னு சொல்ற, அவரு ஆண்டுதோறும் அமெரிக்க இங்கிலாந்து தூதரகங்களை முற்றுகையிட்டு நிக்கிறாரு.

நீ அவரை ஏகாதிபத்தியங்களின் கையாளுன்னு சொன்ன, அவரு ஏகாதிபத்தியங்களின் தலைமை WTO வை எதிர்த்து நிக்கிறார்.

நீ அவரை சண்டே போராளின்னு சொன்ன, ஒரு மாசத்தின் 28 நாட்கள் போராட்டங்களில் நிற்கிறார்.

நீ அவரை கார்ப்ரேட்ன்னு சொல்ற, அவரு 9 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இளம் தொழிலதிபர்ன்ற புகழை துறந்து நிக்கிறார்.

நீ இன்னும் நிறைய கோணங்களில் அவரை அவதூறு செய்.. அப்பத்தான் இன்னும் நிறைய கோணங்களில் அவர் உழைக்கும் மக்களின் தோழன் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள்..

உன் அர்த்தமற்ற அவதூறுகளுக்காக ரகசியமாகவேணும் நீ கூனி குறுக தகுதியான அத்தனை செயல்பாடுகளும் அவரிடத்தில் உண்டு.. தொடர்ந்து அவதூறு செய்..

Leave A Reply

Your email address will not be published.