உடல் எடை அனுஷ்காவின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு தடை ! இது அனுஷ்காவா?புகைப்படம் உள்ளே

0

முன்னணி நடிகையான அனுஷ்கா உடல் பருமன் காரணமாக சினிமா வாய்ப்புகளை இழந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அனுஷ்கா. விஜய், ரஜினிகாந்த், அஜித்இ சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அருந்ததி, பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்கள் இவரது நடிப்புத் திறமையை வெகுவாக பாராட்டிய படங்கள். கடைசியாக இவரது நடிப்பில் வந்த பாகுமதி கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து எந்த படங்களும் கைவசம் இல்லை. எடை கூடியதன் காரணமாக இளம் ஹீரோக்களும் அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக கூட்டிய எடையை அவரால் குறைக்க முடியவில்லை. பாகுபலி 2 படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளின் மூலம் அனுஷ்காவின் உடல் எடையை குறைத்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜமௌலி. பாரதிராஜா இயக்கவுள்ள மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில், பட வாய்ப்பு இல்லாததால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து நல்ல வரன் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாகுபலி ஹீரோ பிரபாஸூடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அது உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு வரன் தேடும் பணியில் அவரது பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அனுஷ்காவின் உடல் எடை கூடிய புகைப்படம் சமூக வலைதலங்களில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இவ்வளவு குண்டாகிவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.