உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..!

0

பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் V. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பான பத்திரத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும், குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரைவை அங்கீகாரம் கிடைத்தவுடன் உயர்தரதில் சித்தியெய்தியவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய, வட மேல், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்ககளிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.