உலகளவில் கூகுலில் அதிகம் தேடியது மோடியா? அம்மாவா? கலைஞரா? அதிரடி ரிப்போர்ட்!

0

மோடினு சொல்லி பல நாடுகளை தேடியிருக்கலாம். அதுக்கப்புறமும் லேடிய உடம்பு சரியில்லாம இருக்கும் போது தேடி இருக்காலம்.ஆனா இப்ப 58 நாடுகள் சேர்ந்து இணையத்தில் கலைஞரை தேடி இருக்கறது தான் இன்னைக்கு டாப் இடம் பிடிச்சிருக்கு.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல் நிலை காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் கூகுள் தேடலில் இந்திய அளவிலான சமீபத்திய ட்ரெண்ட்டில் கருணாநிதி என்ற பெயர் 5 லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்டுள்ளது. கலைஞர் என்ற வார்த்தையை 2 லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்டுள்ளது.

கருணாநிதி என்ற பெயரையும் கலைஞர் என்றய பெயரையும் கூகுளில் புதுச்சேரியில் இருந்து தான் அதிகம் தேடப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை குறித்து நாளும், நிமிடம் வெவ்வொரு செய்திகள் வெளியாகின்றன. இதனால் புதுவையை சேர்ந்தவர்கள் அதிகம் தேடி வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கான ஆகிய தென்மாநிலங்களும் கருணாநிதியை குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் கலைஞர், கருணாநிதி என்ற பெயர்களும் அதிக முறை தேடப்பட்டுள்ளன.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட 58 நாடுகள் சேர்ந்து கருணாநிதி, கலைஞர் என்ற பெயரை கூகுளில் தேடியுள்ளன. இப்போது மோடியையும், ஜெயலலிதாவையும் தாண்டி கருணாநிதி தான் கூகுளில் டாப் ட்ரெண்டிங் ஆகியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.