கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு மாயம் ! 11 மீனவர்களை காணவில்லை

0

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 11 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தாம் அலையுடன் அள்ளுண்டுச் சென்றுள்ளதாக, படகிலிருந்த மீனவர்கள் தமது உறவினர்களுக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், நேற்று   இரவு 9 மணிக்குப் பின்னர் அவர்களிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போயுள்ள மீன்பிடிப் படகை தேடும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ள 11 மீனவர்களும், அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.