திமுக தலைவர் மறைவை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களைவையில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தீர்மானத்தை வாசித்தனர். அப்போது மறைந்த கருணாநிதி மிக சிறந்த தலைவர் என வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க தொடர்ந்த வழக்கில் அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ராஜாஜி மஹாலில் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பி வருகின்றனர். வாழ்க வாழ்க வாழ்கவே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்கள் தலைவருக்கு கிடைத்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
“உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்தபிறகும் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்துள்ளது” என ராஜாஜி மஹாலில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மெரினாவில் இடம் ஒதுக்க கோரி உத்தரவிட்டார்.
தீர்ப்பு வெளியானதும் மு.க.ஸ்டாலின் கண்ணிர் மல்க அழுதுள்ளார் மேலும் தீர்ப்பு சாதகமாக கிடைத்ததால் கனிமொழி புன்னகையுடன் ஸ்டாலினிடன் செல்கிறார்.