மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீ லங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது இரங்கலை தமிழில் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் சமூக வலைத்தளத்திலேயே அவர் இந்த இரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
”தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து துயருற்றேன். தமிழ் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை.” என்று தனது இரங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் தனது இரங்கலை தமிழில் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த இறுதி யுத்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.