காத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய காதலிகள்!!

0

காத­லர்­க­ளுடன் இணைந்து காட்­டுக்குள் பியர் அருந்­திக்­கொண்­டி­ருந்த இரு யுவ­திகள் உட்­பட நான்கு பேரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 வய­து­க­ளு­டைய இரு யுவ­தி­களும் 22 வயது மதிக்­கத்­தக்க இளை­ஞர்கள் இரு­வ­ருமே இதன் போது கைது செய்­யப்­பட்­டனர்.

கம்­பளை நக­ரி­லி­ருந்து மகா­வலி அணைக்­கட்­டுப் ­பி­ர­தே­சத்­திற்குச் செல்லும் வழியில் அமைந்­துள்ள காட்டுப் பகு­திக்குள் இரண்டு காதல் ஜோடிகள் மது அருந்­து­வ­தாக கம்­பளை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் ஸ்தல­த­்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு குறித்த இரண்டு காதல் ஜோடி­களும் பியர் அருந்திக் கொண்­டி­ருந்­ததைக் கண்டு பிடித்­துள்­ளனர்.

இதன் போது மேற்­படி சுற்றிவளைப்­பை மேற்­கொண்ட கம்­பளை பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ். அக்பர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் குறித்த இரு­வ­ரையும் கைது செய்­த­துடன் அவர்கள் பய­ணித்த காரையும் கைப்­பற்றி பொலிஸ் நிலை­யத்­திற்கு கொண்டு வந்­தனர்.

அங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜயந்த குறித்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.