கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து! புலம்பெயர்நாட்டில் இருந்து வந்த மகளும் தாயும் பலி!

0

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பருத்திதுறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த தமது மகளை அழைத்து யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தது.

இயக்கச்சிக்கும்- பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ் வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.