கிளிநொச்சியில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் நல்லடக்கம் ! படங்கள் இணைப்பு

0

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் யுவதியின் இல்லத்தில் இருந்து பூதவுடல் எடுத்து செல்லப்பட்டு முறிகண்டி சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கருப்பையா நித்தியகலா பன்னங்கண்டி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இதேவேளை, இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.