குள்ள மனிதர்கள் விவகாரம்- மூடி மறைக்க முயற்சிக்கும் பொலிஸார்!

0

மக்­கள் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி மக்­க­ளி­டம் நேரில் சென்று அறி­வ­தற்கு துளி­ய­ள­வே­னும் ஆர்­வம் காட்­டாத அல்­லது விருப்­பம் இல்­லாத வடக்கு மாகா­ண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலி­ஸார் கூறு­வதை நம்­பு­வ­தும், அதை பத்­தி­ரிகை­க­ளுக்­குத் தெரி­வித்து எது­வுமே நடக்­க­வில்லை என்­ப­து விச­­னத்­துக் கு­ரி­யது, ஒரு நாள் அவர் இங்கு வந்து இரவு முழு­வ­தும் நின்று நில­மை­களை அவ­தா­னித்­தால் தெரி­யும் மக்­கள் படும் பாடு. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் அராலி மக்­கள் கொதித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம், அரா­லிப் பகு­தி­யில் தொடர்ந்­துள்ள வீடு­கள் மீதான கல்­வீச்­சுத் தாக்­கு­தல் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று முன்­தி­னம் தெரி­வித்த கருத்­துத் தொடர்­பில் அந்த மக்­க­ளி­டம் நேற்று வின­வி­ய­போதே அவர்­கள் இவ்­வாறு தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம், மட்­டு­மல்­லாது வடக்கு மாகா­ணத்­தி­லும் தற்­போது பர­வ­லா­கப் பேசப்­ப­டும் விட­யம் அராலி மக்­கள் எதிர்­கொள்­ளும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல் தொடர்­பா­னதே! குள்ள உரு­வம் கொண்­ட­வர்­களே வீடு­கள் மீது கற்­களை வீசி­விட்டுத் தப்­பித்­துச் செல்­கின்­ற­னர் என்று அராலி மக்­க­ளால் குற்­றஞ்­சாட்­டப்­பட்டுள்­ளது.

குள்ள மனி­தர்­கள் யார் என்­பதை அவர்­கள் அடை­யா­ளம் காணா­த­போ­தும், கல்­லெ­றி­வது குள்­ளர்­கள்தான் என்­பதே அவர்­க­ளு­டைய வாத­மாக உள்­ளது. அவர்­க­ளைச் சிலர் நேரி­லும் கண்­டுள்­ள­னர். இது தொடர்­பில் அண்­மை­யில் இடம்­பெற்ற கூட்­டம் ஒன்­றி­லும் பலர் கண்­கண்ட சாட்சி­யா­க தம­து­க­ருத்துக்களைப் பதிவு செய்­த­னர் .

வீட்­டுக் கூரை­க­ளின் மேல் குதிப்­பது போன்று சத்­தம் கேட்­கின்­றது, உட­ன­டி­யா­கவே வெளி­யில் சென்று பார்த்­தால் யாரும் அங்கு இல்லை, வேலி­க­ளில் உள்ள மரங்­கள் அசை­கின்­றன. வீதி­க­ளில் இருந்து வீடு­க­ளுக்கு கல் வீசப்­ப­டு­கி­றது. அப்­போது கூட அங்கு யாரும் இருக்­க­வில்லை. சப்­பாத்­துக் கால்­க­ளு­டன் வீதி­யில் ஓடு­வது போன்று சத்­தம் கேட்­கின்­றது மதி­லால் எட்­டிப்­பார்­தால் யாரும் இல்லை. அந்த நபர்­க­ளைத் தேடித் திரி­யும் போதும் எவ­ரும் அகப்­ப­ட­வில்லை.

ஆனால் சில நிமி­டங்­க­ளிலேயே இன்­னும் ஒரு வீட்­டுக்கு கல்­வீச்சு இடம்­பெ­று­கி­றது. இவ்­வாறு செய்­ப­வர்­கள் எங்­க­ளு­டைய கண்­க­ளுக்­குப் பட­வில்லை என்­றால் அவர்­கள் குள்­ளர்­கள் தான். நாங்­கள் வரு­வ­தைத் தெரிந்து உட­னேயே மறை­கின்­ற­னர். தாவும் திற­னைக் கொண்­டி­ருந்­தாலே கூரை­யில் இருந்து மரத்­துக்­குத் தாவி, வீதி­யில் குதித்து ஓட முடி­யும்.

சாதா­ரண நபர்­கள் என்­றால் மதி­லால் பார்க்­கும் போது ஓடு­வ­தைக் கண்­டு­கொள்ள முடி­யும், ஆனால் இவர்­க­ளைத் தெரி­ய­வில்லை. இவ்றை எல்­லாம் வைத்து குள்­ள­ம­னி­தர்­கள் என்றே கூறுகிறோம். என்­றும் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

எனி­னும் மக்­க­ளு­டைய குற்­றச்­சாட்­டுக்­கள் கண்­கண்ட சாட்­சி­கள் அனைத்­தும் பொய்த்­து­ வி­டு­மாற்­போல் வடக்கு முத­ல­மைச்­சர் நேற்று முன்­தி­னம் பத்­தி­ரி­கை­க­ளுக்கு விள­க்கத்­தைக் கூறி­னார். பொலி­ஸா­ரு­டைய கதையை நம்­பியே முதல்­வர் அவ்­வாறு கூறி­யுள்­ளார்.

பத்­தி­ரி­கை­க­ளில் வரும் குள்­ள­ம­னி­தர்­கள் பற்­றிய செய்தி அர­சி­யல் பின்­ன­ணி­யில் பரப்­பப்­பட்­டுள்­ளது. அரா­லி­யில் நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் தொடர்­பில் எவ­ரும் பொலிஸ் நிலை­யத்­தில் முறை­யி­ட­ வில்­லை, குள்­ள­ம­னி­தர்­க­ளைக் கண்­டேன் என்று யாரும் முன்­வந்து கூற­வில்லை. எனவே அது பொய் என்­பதே அவ­ரு­டைய விளக்­க­மாக உள்­ளது.

பர­வ­லா­கப் பேசப்­பட்ட சம்­ப­வம்

அரா­லி­யின் பல பகு­தி­க­ளி­லும் கடந்த ஒரு மாதங்­க­ளுக்கு மேலாக இந்­தச் சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கின்­றன. எனி­னும் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி இரவு அரா­லி­யில் கடும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது. இளை­ஞர்­கள் கூடி தேடு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தின் போது வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் முன்­னி­லை­யி­லேயே அந்த மக்­கள் குள்ள மனி­தர்­களே இந்­தச் சம்­ப­வங்­க­ளுக்­குக் காா­ர­ணம் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யி­ருந்­த­ னர். மக்­க­ளு­டைய இந்­தப் பிரச்­சி­ னையை உத­யனே முதன் முதல் பொது வெளிக்­குக் கொண்­டு­வந்­தான்.

கட்­டுக்­கதை

கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் இடம்­பெ­று­கி­ற­து, குள்­ள­ம­னி­தர்­கள் தான் கற்­களை வீசு­கின்­ற­னர் என்­பது வெறும் கட்­டுக்­கதை என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே. சயந்­தன் அண்­மை­யில் தெரி­வித்­தார். இந்­தக் கதை­யைப் பரப்­பி­ய­வ­ரைக் கைது செய்­ய­வேண்­டும் என்­றும் அவர் சீறி­னார். சம்­ப­வங்­கள் பற்றி ஏதும் அறி­யா­ம­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவ­ரைத் தொடர்ந்து பல­ரும் அந்­தச் சம்­ப­வம் பொய் என்­ற­னர்.

பொலி­ஸா­ரி­டம் சிற­ந்த உற­வைப் பேணி அதன் மூலம் அவர்­கள் கூறு­ப­வற்­றையே அவர்­க­ளும் பொது வெளி­யில் கொண்டு வந்­த­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் அவ்­வாறே. அர­சி­யல் பின்­ன­ணி, கட்­டுக்­கதை என்று பொலி­ஸார், நம்­பு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். பதிவு செய்­யப்­ப­டாத இணையத்­த­ளங்­க­ளும் அர­சியல் வாதி­க­ளின் கூற்­றுக்கு விசு­வா­சம் காட்­டத் தவ­ற­வே­யில்லை.

நடந்த உண்மை

‘‘எனது வீட்­டுக்­கும் கல்­லெ­றிந்­தார்­கள் வீதி­யில் சென்று பார்த்­தால் எவ­ரும் இல்லை. நீண்ட கால­மாக இங்­கு­தான் இருக்­கி­றோம். இப்­போதுதான் இந்­தப் பிரச்­சினை வந்­துள்­ளது. அடுத்­த­டுத்து கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இருந்­தும் என்ன செய்­வது பயத்­து­டனே வாழ்­கின்­றோம்’’ என்று அரா­லி­யைச் சேர்ந்த கம­லாம்­பிகை தெரி­வித்­தார்.

‘‘அரா­லி­யில் கல்­லெ­றி­யாத வீடு­களே இல்­லை, தொட­ர்ச்­சி­யாக தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன. பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம், பொலி­ஸார் இங்கு வந்து நடந்­த­வற்­றைக் கேட்­ட­னர். நாங்க­ளும் கூறி­யுள்­ளோம். அண்­மை­யில் இடம்­பெற்ற கூட்­டத்­தின்­போது கண்­ணால் கண்­டேன் என்று பெண்­கள் சிலர் கூறி­யுள்­ள­னர். பொலி­ஸா­ருக்கு முன்­னி­லை­யி­லேயே எமது இளை­ஞர்­கள் தேடு­தல்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர் என்று அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த கணே­ச­லிங்­கம் தெரி­வித்­தார்.

பொலி­ஸார் மீது மக்­கள் வெறுப்பு

அரா­லி­யில் இடம்­பெ­றும் சம்­ப­வங்­கள் தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் உட­ன­டி­யா­கவே சம்­பவ இடத்­துக்கு வர­வில்­லை, அடுத்­த­தாக 119 என்ற அவ­சர பொலிஸ் சேவைக்கு அழைத்­தோம் அதன் பின்­னரே வட்­டுக்­கோட்­டைப் பொலி­ஸார் இங்கு வந்­த­னர்.வந்­த­தும் அவர்­கள் அவ­சர பொலிஸ் சேவைக்கு அழைத்­த­தைக் கண்­டித்­த­னர்.

உட­ன­டி­யாக இங்கு வர­மு­டி­யாத அவர்­கள் சம்­ப­வம் நடை­பெ­ற­வில்லை என்று கூறு­வது அவர்­கள் மீதே சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. கல்­வீச்­சுத் தாக்­கு­தல்­கள் தொடர்­பில் அண்­மை­யில் பொலி­ஸா­ருக்­கும், மக்­க­ளுக்­கு­மி­டை­ய­லான சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது. இதில் நடந்த விட­யங்­க ­ளைக் கூறி­யி­ருந்­தோம்.

கண்­ணால் கண்­டேன் என்று சில பெண்­கள் கூறி­யி­ருந்­த­னர். கறுப்பு உடை­அ­ணிந்­தி­ருந்­தார்­கள், முகம் தெரி­ய­வில்லை என்­றும் அவர்­கள் கூறி­யுள்­ள­னர். இதன்­போது பொலிஸ் அதி­கா­ரி­கள், கிராம அலு­வலர்­க­ளும் உட­னி­ருந்­த­னர். இத்­த­னை­யும் தாண்டி முறைப்­பாடு பதிவு செய்­யப்­ப­ட­வில்­லை, கண்­கண்ட சாட்சிகள் இல்லை என்று பொலி­ஸார் கூறு­வது முறைப்­பாடு செய்­ப­வர்­க­ளை தனிப்­பட்ட முறை­யில் பழி­தீர்ப்­ப­தற்கா? பொலி­ஸா­ருடை கதையை முத­ல­மைச்­சர் நம்­பு­வ­தும் அதை உண்மை என்று வெளிப்­ப­டுத்­து­வ­தும் விசனத்­துக்­கு­ரி­யது என்று அராலி அம்­மாள் சன­ச­மூக நிலை­யத்தை அண்­டி­யுள்ள பெயர் குறிப்­பிட விரும்­பாத ஒரு­வர் தெரி­வித்­தார்.

பெயர் மற்­றும், ஒளிப்­ப­டங்­களை வெளி­யிட்­டால் அத­னால் ஆபத்­துக்­கள் வரும் என்று மக்­கள் அஞ்­சு­கின்­ற­னர். அதனால் பலர் தங்­க­ளு­டைய பெயர்­க­ளையோ, ஒளிப்­ப­டங்­க­ளை­யோ, பத்­தி­ரி­கையில் பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்­கு­மாறு வேண்டிக் கொண்­ட­னர்.

கல்­வீச்­சுத்­தாக்­கு­தல்

அராலி ஐய­னார் கோவி­ல­டியை அண்­டிய பகு­தி­யில் உள்ள வீடொன்­றின் மீது நேற்று முன்­தி­னம் இர­வும் கல்­வீச்­சுத் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வீட்டு விறாந்­தை­யில் வீட்­டின் உரி­மை­யா­ளர் படுத்­தி­ருந்த போது சம்­ப­வம் இடம்­பெற்­றது. கூரை­யைப் பிரித்து உள்ளே வந்த கல்­லில் இருந்து மயி­ரி­ழை­யில் தப்­பி­யுள்­ளார் உரி­மை­யா­ளர்.

தற்­போ­தும் கல்­வீ­சப்­பட்ட அடை­ய­ளம் உள்­ளது. சம்­ப­வம் நடை­பெற்ற போதும் அது பற்றி பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கப்­ப­ட­வில்­லை, அங்­குள்ள நில­மை­களை அறி­யா­ம­லேயே பொலி­ஸார் தமது கண்­டு­பி­டிப்­புக்­களை மேற்­கொண்­டுள்­ள­னர் என்­ப­தை­யும், பொலி­ஸா­ரு­டைய கதை­களை நம்பி அதுவே உண்மை என்­பது போன்று முத­ல­மைச்­ச­ரு­டைய கருத்­து­க்­கள் உள்­ளன என்­ப­தை­யும் நேற்று முன்­தி­னம் இரவு இடம்­பெற்ற கல்வீச்­சுத் தாக்­கு­தல் சம்­பமே தெளிவுபடுத்­து­கின்­றது.

பொலி­ஸா­ ருடைய கதையை நம்­பிக் ­க­தைப்­பது வேடிக்­கை­யா­னது அவர் ஒரு நாள் இங்கு வந்து நின்­றி­ருக்­க­வேண்­டும் அப்­போதே தெரிந்­தி­ருக்­கும். நடக்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி யாகத் தலை­யிட்டு தீர்வு கண்டு எமக்கு ஆறு­தல் கூறா­து, பெரும் சம்­ப­வங்­கள் இடம்­பெ­றும் போதெல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருந்­து­விட்டு அதுவே சற்று ஓய்ந்து வரும் போது மக்­க­ளு­டைய மன­தைப் புண்­ப­டுத்­து­வது போன்­றும், எது­வுமே நடக்­காது போன்­றும் கதைத்­துக் கொண்­டி­ருக்­கக் கூடாது என்று மக்­கள் கொதித்­துள்­ள­னர்.

Leave A Reply

Your email address will not be published.