கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களுடன் உதவிக்கரம் நீட்ட சென்ற சீமான் கைது ! காரணம் என்ன ? தமிழின உணர்வாளர்கள் ஆவேசம்

0

கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் வழங்க சென்ற போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் வெள்ள பாதிப்புகள் இப்போதுதான் கொஞ்சம் குறைந்துள்ளது. வெள்ளம் வடிய தொடங்கி உள்ள நிலையில் அங்கு வேகமாக மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை நிவாரண பொருட்களுடன் சென்றுள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன், வாகனங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அவர் கேரளா சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீமான் சென்ற வாகனத்தில் விடுதலை புலிகளின் கொடி, பிரபாகரனின் புகைப்படம் இருந்துள்ளது. இதை பார்த்த போலீசார் அவரை நிறுத்தி கைது செய்துள்ளனர்.

கோட்டயம் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரணை நடந்துள்ளது. ஆனால் 2 மணி நேரத்தில் போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.