டெல்லியில் நரசிம்மராவுடன் தம்பித்துரை பேசுவார்! திண்டுக்கல் மறதி சீனிவாசன் பேச்சால் சர்ச்சை

0

டெல்லி சென்று நரசிம்மராவுடன் துணை சபாநாயகர் தம்பித்துரை பேசுவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

திண்டுக்கல் அருகே வேடசந்தூர், கல்வார் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

இங்குள்ள சுகாதார நிலையத்தை பரமசிவம் எம்.எல்.ஏ.வே திறந்து வைத்திருக்கலாம். எங்களை அழைத்திருக்க தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் வற்புறுத்தல் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்துள்ளோம்.

தற்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பரமத்தி வேலூரில் பொதுமக்களிடம் குறை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவார். மாலை உணவுக்கு புதுக்கோட்டை சென்று விடுவார்.

அதன் பின்னர் டெல்லியில் போய் உட்கார்ந்து பிரமதர் நரசிம்மராவுடன் பேசுவார் என்றார். இவ்வாறு பேசியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்றார்.

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இட்லி சட்னி சாப்பிட்டார் என்று கூறியது பொய். எங்களை மன்னித்து விடுங்கள் என்று சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

Leave A Reply

Your email address will not be published.