தமிழர் இதயபூமியை காக்க அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

0

தமிழர் தாயகத்தின் இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில், மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் நடைபெறும் நில அபகரிப்பு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றினை நடத்த தமிழர் மரபுரிமைப் பேரவை முன்வந்துள்ளது. இதற்க்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை, இதய பூமியைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்க்கு பெரும்பான்மையின அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும், குறித்த ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.