நெடுங்கேணி வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு வாகனம். சினிமா பாணியில் விபத்து

0

வவுனியா நெடுங்கேணியில் இன்று காலை 9மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பிறாடோ வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களின்றி உயிர்தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு கொழும்பிலிருந்து வைத்தியர் ஒருவரை முல்லைத்தீவில் இறக்கிவிட்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பும்போது நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் பிறாடோ வாகனம் வீதியைவிட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளாகியுள்ளது. இதன்போது எவ்வித காயங்களும் இன்றி சாரதி அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.

நித்திரைத்தூக்கமே இவ்விபத்திற்குக்காரணமாக இருக்கலாம் என்று பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.