பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை துரத்தும் கோடீஸ்வரர் ! கடும் கோபத்தில் சங்கா

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்கக்கார விடயத்தில் பிரபல கோடீஸ்வரர் ஒருவர் நேரடியாக தலையிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த வர்த்தகர் கடந்த ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்ச அமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளார். அத்துடன் அவர் இலங்கையில் உள்ள பிரதான தரப்பு கோடீஸ்வரர்களில் ஒருவராகும்.

எனினும் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றே தொடர்ந்தும் குமார் சங்கக்கார கூறி வருகின்றார். இது தொடர்பில் அவரது சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் சங்கக்காரவின் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கோடீஸ்வரர், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.இதற்காக சங்கக்காரவுக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து செலவுகளை தான் ஏற்றுக்கொள்ளவதாக குறித்த கோடீஸ்வரர் சங்கக்காரவிடம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.