போடு மாமா போடு மாமா அங்கயே போடு, என்ன பண்றான்னு பாக்கலாம் ! மைதானத்தில் தமிழில் பேசி அசத்திய இந்திய வீரர்கள் ! காணொளி உள்ளே

0

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது .நேற்று ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தமிழில் உரையாடிய காணொளி பேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது .

போட்டியின் 17 வது ஓவரை தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் வீசிக்கொண்டிருந்த போது விக்கெட் கீப்பராக களத்தில் நின்ற தினேஷ் கார்த்திக் அஸ்வினை நோக்கி “போடு மாமா போடு மாமா அங்கயே போடு, என்ன பண்றான்னு பாக்கலாம் ” என்று கூறினார் .

சர்வதேச போட்டியொன்றில் மைதானத்தில் தமது தாய்மொழியான தமிழில் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் உரையாடியமை பாராட்டுதற்குரியது .

Leave A Reply

Your email address will not be published.