சிங்களப் படையினரின் இன அழிப்புப் போரின் போது இடையில் அகப்பட்டு உயிரிழந்த தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் உட்பட பத்து பேரின் நினைவாக சங்க முன்றலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி இன்று திறக்கப்பட்டது.
சங்கத் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராஜா, .ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கே.சயந்தன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க. வாமதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.