வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த 15ம் திகதி ஆரம்பமான மஹோற்சவ திருவிழா பெருந்தொகையான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தினமும் நடைபெற்று வரும் திருவிழாவில் பல்வேறு விதமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ஆலய முன்றலில் மணலினால் வரையப்பட்ட முருகன், ஆலயம் வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக உள்ளது.
மணலினை கொண்டு பல்வேறு வடிவங்களில் முருகனின் திருவுருவம் வரையப்பட்டுள்ளது.
இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.