மன்னாரில் இது வரை மீட்கப்பட்டது102 மனித எச்சங்கள்! (வீடியோ )

0

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமை(27) 58ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து இன்று வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு 440ற்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.இந்த நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தரப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்;கப்பட்டு வருகின்றது. மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிய வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.