அண்மையில் முன்னால் போராளி என்று கூறப்படும் இன்பராசா என்பவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிற்கும் பொழுது இலங்கை முஸ்லிம்களிடம் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து வவுனியாவை தளமாக வைத்து இயங்கும் பத்திரிகை ஒன்றின் நிர்வாக இயக்குனரும் , ஊடகவியலாளருமான பிரகாஸ் என்பவர் தனது நேரடி அறிக்கை ஒன்றினை காணொளி மூலம் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்.
குறித்த காணொளி பெரும் சர்ச்சையை உண்டு பன்னும் அளவிற்க்கு உள்ளதாக பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர் மேலும் குறித்த காணொளியில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் விரட்டப்பட்டமை சரியெனவும்,விடுதலை புலிகளின் ஆயுதங்கள் இன்னமும் முஸ்லிம்களிடம் இருப்பதாகவும்,முஸ்லிம்கள் அதிகமாக தமிழீழ போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் என்றும்,2009 வரையிலும்,அதன் பின்பும் முஸ்லிம்கள் ஈழபோராட்டத்திற்கு எதிராகவே செயற்பட்டனர் என்றும் கருத்துக்களை குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது குறித்த காணொளி சமூகவலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.