யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழுவின் தலைவர் அதிரடியாக கைது!

மக்கள் தாக்க முற்பட்டமையினால் பதற்றம்

0

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழுவின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குழுவை செயற்படுத்தும் தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவினரை கைது செய்த போது, அந்தப் பகுதி மக்கள் அவர்களை தாக்க முற்பட்டமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும் கடும் போராட்டத்தின் மத்தியில் ஆவா குழுவினரை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரு குழுக்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குற்ற செயலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், வாள், கத்தி மற்றும் இரும்பு ஆகிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 10 பேரில் 6 பேர் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும், ஏனையோர் தனுரொக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.