யாழ்ப்பாணம் – அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணாமல் தேடுதலில் ஈடுபட்ட போது, குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அயலவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி அளித்து, வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் டிலக்சன் என்ற ஒரு வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.