சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார் .
இந்த விபத்து, இன்று இரவு ஏழு மணியளில் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில் மோதியே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
22 வயதான மார்கண்டு சுலக்சன் மற்றும் 23 வயதான மகாதேவ் சுஜீவன் ஆகிய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும், மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து ரயிலுடன் மோதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.