வட­ம­ராட்­சிக் கட­லில் 15,000 கிலோ மீன்களுடன் 19 சிங்கள மீனவர்கள் நேற்றுக் கைது! 6 பட­கு­க­ளும் பறி­மு­தல்!!

0

பருத்­தித்­து­றைக் கடற்­ப­ரப்­பில் சட்­டத்­துக்­குப் புறம்­பான வழி­யில் தொழிலில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த மீன­வர்­கள் உள்­ளிட்ட 19 பேர் நேற்று இரவு கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் பய­ணித்த ஆறு பட­கு­க­ளும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. ஒவ்­வொரு பட­கில் இருந்­தும், தலா பல ஆயி­ரம் கிலோ­வுக்­கும் அதி­க­மான பாரை­மீன்­க­ளும் மீட்­கப்­பட்­டன. 15 ஆயி­ரம் கிலோ மீன்­கள் அந்­தப் பட­கு­க­ளில் இருந்­த­தாக மக்­கள் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­த­னர். எனி­னும் அதி­கா­ரி­கள் அதனை உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

கடற்­ப­டை­யி­ன­ரும் அதி­கா­ரி­க­ளும் கைப்­பற்­றப்­பட்ட மீன்­க­ளின் தொகை­யைக் குறைத்­துக்­காட்ட முயற்­சிக்­கி­றர்­கள் என்று உள்­ளுர் மீன­வர்­க­ளும் மக்­க­ளும் சந்­தே­கப்­பட்­ட­தன் கார­ண­மாக கடற்­ப­டை­யி­ன­ரு­ட­னும் அதி­கா­ரி­க­ளு­ட­னும் அவர்­கள் முரண்­பட்­ட­னர். இத­னால் அந்­தப் பகு­தி­யில் நேற்­றி­ரவு பதற்­றம் நில­வி­யது.

ஏற்­க­னவே வட­ம­ராட்­சிக் கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்பு உள்­ளிட்­ட­வற்­றில் சட்­டத்­துக்­குப் புறம்­பான வகை­யில் இயங்­கு­கின்­ற­னர் என்­கிற குற்­றச்­சாட்டு இருக்­கும் நிலை­யில் நேற்று இவ்­வா­றான சம்­ப­வம் நடை­பெற்­ற­தும் வட­ம­ராட்சி மீன­வர்­களை மேலும் கோபத்­தில் ஆழ்த்­தி­யது. கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்ட மீன­வர்­களை கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­தி­ணைக்­க­ளம் பார­மெ­டுக்­கும் வரை வட­ம­ராட்சி மீன­வர்­கள் கடற்­ப­டை­மு­காம் முன் அமர்ந்­தி­ருந்­த­னர். பிடிக்­கப்­பட்ட மீன்­களை தமக்கு முன்­னா­லேயே அள­வி­டு­மா­றும் மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். இத­னால் அங்கு பதற்­ற­மான நிலமை காணப்­பட்­டது.

கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்ட மீன­வர்­கள் தாம் சட்­ட­வி­ரோத (சுருக்­கு­வலை) தொழில் ஈடு­ப­ட­வில்லை, என்­றும், அனு­ம­தி­பெற்ற தொழி­லையே மேற்­கொண்­டோம் என்­றும் தெரி­வித்­த­னர். எனி­னும் வட­ம­ராட்சி மீன­வர்­க­ளின் கொந்­த­ளிப்­பால் அவர்­கள் கடற்­தொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். பிடிக்­கப்­பட்ட மீன்­களை அள­வி­டும் நட­வ­டிக்­கை­கள் இர­வி­ர­வாக மேற்­கொள்­ளப்­பட்­டன.

வட­ம­ராட்­சிக் கடற்­ப­ரப்­பில் இடம்­பெ­றும் சட்­டத்­துக்­குப் புறம்­தொ­பான ழிலை நிறுத்­து­மாறு தெரி­வித்து வட­ம­ராட்­சி­யில் மீன­வர்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். கடற்­ப­டைக்கு எதி­ரா­க­வும் அவர்­கள் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­னர். அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் வந்த கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­துறை அமைச்­சர் விஜ­ய­முனி சொய்­சா­வு­டன் இது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­னர். சட்­ட­வி­ரோத தொழில்­களை நிறுத்­து­மா­றும், வட­ம­ரா­ட­சி­யில் உள்ள கட­லட்டை நிறு­வ­னங்­களை இனி அந்­தத் தொழிலை மேற்­கொள்ள வேண்­டாம் என்­றும் அமைச்­சர் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.

Leave A Reply

Your email address will not be published.