விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அமைச்சர்களிடம்! முஸம்மில் சீற்றம்

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்த ஆயுதங்கள் இந்நாட்டின் முஸ்லிம் அமைச்சர்களின் கையில் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த தகவல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை வெளியிட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தி மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களிடம் ஆயுதம் இருப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.