வெடுக்குநாரி மலைக்கு வடக்கு அமைச்சர் அனந்தி விஜயம்!

0

வவுனியா, வெடுக்குநாரி மலைக்கு வடக்கு மாகாண வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தார்.

அங்குள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.

வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் தமது ஆளுகைக்குள் கொண்டுவர முற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி வவுனியா பிரதேச மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொண்டநிலையில் இன்று அவர் அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.